துபையின் பிரசித்திபெற்ற மக்தூம் பிரிட்ஜ் வருடாந்திர பாரமரிப்பு
பணிகளுக்காக எதிர்வரும் 27.10.2017 வெள்ளிக்கிழமை முதல் 24.11.2017
வெள்ளிக்கிழமை வரை 5 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் நள்ளிரவு 1 மணிமுதல்
காலை 9 மணிவரை போக்குவரத்திற்கு மூடப்படும்.
அதேபோல் மக்தூம் பிரிட்ஜ் கீழே இயங்கும் கடல் போக்குவரத்தும் ஞாயிறு
மற்றும் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை
மூடப்படும்.
மக்தூம் பிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கிழமைகளில் மாற்றுப்பாதைகளான
ஷின்டாகா டனல், அல் கர்ஹூத் பிரிட்ஜ், பிஸ்னஸ் பே கிராசிங் (புளோடிங்
பிரிட்ஜ்) மற்றும் ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு ஆகியவற்றிற்கு வாகனங்கள்
திருப்பி விடப்படும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.
Source: Gulf News

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!