மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.
கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும். ஆனால் அதே சமயம் அது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிக்க முயலும் போது தடையை ஏற்படுத்தும்.
குமட்டல்.
கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் குமட்டல். இப்படி கருத்தடை மாத்திரை எடுத்த பின்னர் குமட்டல் ஏற்பட்டால், அது கர்ப்பத்திற்கான அறிகுறி அல்ல. மாறாக அது கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.
இரத்தப்போக்கு.
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னர், மாதவிடாய் சுழற்சியின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.
தலை வலி.
கருத்தரிக்கக் கூடாது என்று கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால், கடுமையான தலை வலி ஏற்படும். இப்படி தலை வலி ஏற்படும் போது, அதற்கான மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.
பிடிப்புகள்.
மாதவிடாய் சுழற்சியின் போது அதிகப்படியான பிடிப்புகள் ஏற்படும். அப்படி பிடிப்புகள் ஏற்படும் போது மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல், சுடு தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும் மற்றும் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும்.
மனநல மாற்றம்.
கருத்தடை மாத்திரையினால் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அது அவ்வபோது மனநல மாற்றத்தை ஏற்படுத்தும்.
காதலுணர்ச்சி குறையும்.
அதிகப்படியான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, நாளடைவில் காதலுணர்ச்சியை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். காதல் வாழ்க்கையில் உள்ள நாட்டம் குறையும்.
மார்பகங்கள் மென்மையாகும்.
இது கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவாகும். அதில் மார்பகங்கள் மென்மையாவதோடு, அதனை தொட்டால் வலி ஏற்படும். ஆனால் இத்தகைய வலி விரைவில் குணமாகிவிடும்.


0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!