துபை மருத்துவமனையில் கேட்பாடற்று கிடக்கும் தமிழக இளைஞர் உடல்!
துபாய் மருத்துவமனையில் இறந்து இரண்டரை மாதமாகியும் உடலை வாங்க யாரும் வராததால் உறவினரிடம் ஒப்படைக்க துபாய் ஈமான் அமைப்பு முயற்சி எடுத்து வருகிறது.
துபாயில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் ( வயது சுமார் 30 ). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபை ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இறந்து விட்டார்.
எனினும் இவரது உடலைக் கேட்டு எவரும் இதுவரை வரவில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த துபை ஈமான் அமைப்பினர் சேகர் தங்கராஜ் குறித்த விபரங்களை அறிந்து அவரது உறவினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
படத்தில் காணும் சேகர் தங்கராஜ் குறித்த தகவல் தெரிந்தவர்கள் துபை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா 050 467 43 99 மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் 050 51 96 433 ஆகிய எண்களிலோ அல்லது info@imandubai.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவித்து உதவலாம்.
தகவல்: முதுவை ஹிதாயத்

1 comments:
பதிவுக்கு நன்றி
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!