சீட் பெல்ட் கட்டாயம் - சட்டம் அமலுக்கு வருகிறது!


சீட் பெல்ட் கட்டாயம் -  சட்டம் அமுலுக்கு வருகிறது!

சென்னை: சீட் பெல்ட் (இருக்கைபட்டை ) அணிவது நான்கு சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு  கட்டாயமாக்கபட்டுள்ளதாக
தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 2 முதல் இச்சட்டம் தீவிரமாக அமுலுக்கு வருகிறது.
             
பெருகி வரும் வாகன விபத்துகளில் உயிர் இழப்புகளை குறைக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் கட்டாயமாக்கப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். முன் இருக்கையில் உள்ள இருவரும் கட்டாயம் சீட் பெல்ட்  அணியவேண்டும் எனவும் மேலும் இதை கடைபிடிக்காதவர்களுக்கு முதல்தடவை அபராதமாக 100 ரூபாயும் மீண்டும் மீறுபவர்களுக்கு  தடவைக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். 50 பேர் கொண்ட  பறக்கும் படை  அமைக்கப்பட்டு தீவிர சாலை கண்காணிப்பில் ஈடுபடபோவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிவது பெரு நகரங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் விபத்தில் உயரிழப்பு குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி -இந்நேரம் ,காம்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!