2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க துபாய் தமிழ் மாணவி தீவிர நீச்சல் பயிற்சி.


2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க துபாய் தமிழ் மாணவி தீவிர நீச்சல் பயிற்சி

துபாய்: வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்காக துபாயில் வாழ்ந்து வரும் தமிழக மாணவி ஒருவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 துபாய் மில்லியனியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் தமிழக மாணவி ஆர்யா ( வயது 11 ). சென்னையை சேர்ந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 12 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற இவர் கடந்த ஒன்பது வருட சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல், ஹரியனாவில் நடைபெற்ற போட்டியில் 10 டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தி சாதனை படைத்துள்ளார். சில பயிற்சிகள் கடினமாக இருந்தாலும் தனது பெற்றோர் லட்சுமிநாராயணன் - ஸ்ரீவித்யா, பயிற்சியாளர் பென்னி ஜோசப் மற்றும் பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் தனக்கு பெரும் உற்சாகமும், ஆதரவும் அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், நீச்சல் பயிற்சிகளுக்கான உடை உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க தனது பெற்றோரே செலவு செய்து வருவதாகவும், நீச்சல் பயிற்சிகளுக்கு ஏதேனும் பெரிய நிறுவனங்கள் உதவிட முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் அம்மாணவி தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!