உயிருக்கு போராடும் பிலால் நகர் சகோதரனுக்கு உதவிடுவீர் !


உயிருக்கு போராடும் பிலால் நகர் சகோதரனுக்கு உதவிடுவீர் !
அதிரை பிலால் நகரில் வசிப்பவர் ஹாஜா. மீன் வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பக்க வாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் சில செயலிழந்தன. தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சிறிதளவு மீண்டெழுந்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் இவருக்கு போதிய பொருளாதார வசதியின்மையால் தொடர்ந்து இவரால் சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பக்க வாதத்தால் பாதிப்படைந்து, வீட்டில் படுத்த படுக்கையாய் காட்சியளிக்கிறார் என்ற தகவல் அவரின் மனைவி மூலம் நமக்கு கிடைத்தவுடன் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தோம்.
இதுகுறித்து ஹாஜா அவர்களின் மனைவி நம்மிடம் கூறுகையில்...
'கடந்த 6 மாதத்திற்கு முன்பு பக்க வாதத்தால் பாதிப்படைந்த எனது கணவருக்கு ஒரு கை, ஒரு கால் விளங்கவில்லை, பேச்சும் தெளிவாக இல்லை. படுத்த படுக்கையாக கிடக்கிறார். உணவு உட்கொள்ளுவதிலும் பெறும் சிக்கலாக இருக்கிறது. சிறுநீரும் படுக்கையிலேயே கழிகின்றன.

எனது கணவர் ஆரோக்கியமாக இருக்கும் போது கடைத்தெரு மீன் மாக்கெட்டில் தினமும் மீன் வியாபாரம் செய்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் எங்களின் பொழுது போனது. இவர் உடல்நிலை பாதிப்படைந்ததை தொடர்ந்து எந்தவொரு வருமானமும் எங்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டது. தற்போது நான் தினமும் பக்கத்து தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று வேலை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பள்ளிக்கூடங்கள் செல்லும் எனது இரு குழந்தைகளின் பராமரிப்பிற்கும், பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கும் மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொடுப்பற்கு போதுமானதாக இல்லை. வீட்டு வேலை செய்துவிட்டு வீடு திரும்பியவுடன் எனது கணவருக்கு வேண்டிய பணிவிடைகளும், எனது குழந்தைகளுக்கு வேண்டிய உணவுகளும் தயார் செய்துகொண்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையோடு வாழ்ந்து வருகிறோம்.

இதனாலேயே எனது கணவரின் மேற் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அவரின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. ஆகையால் அன்புள்ளோம் கொண்ட அருமை சகோதர்களே எங்கள் குடும்பம் படும் துயரில் நீங்களும் பங்கெடுத்துகொண்டு எங்களுக்கு உதவ வேண்டும்' என்று வேதனையுடன் முடித்துக்கொண்டார்.

அங்கிருந்து விடைபெறும் போது பாதிக்கப்பட்ட ஹாஜா அவர்கள் 'அழுதுகொண்டே... சாப்பிடக்கூட எங்களிடம் காசில்லை' என்று சைகையில் கூறியது எங்களின் மனதை நெகிழ வைத்துவிட்டது.

நிதி உதவி கோரி பாதிப்படைந்த குடும்பத்தினர் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம் :
A/c Name : A.THAJUDEEN
Bank Name : CANARA BANK
Branch :ADIRAMPATTINAM
A/c No. 1201101040484

தொடர்புக்கு : 0091 9842411587

குறிப்பு : இவரின் குடும்பத்திற்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள ஹாஜா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
 
நன்றி : அதிரை நியூஸ்

1 comments:

ஹபீப் HB said...

அல்லாஹு உதவிய பணத்தில் இருந்து ஒரு பகுதியை பசியாளி அன்றாடம் ஒருவேளை சாப்பாடு சாப்புட வழியில்லாவர்களுக்கு அள்ளி வழங்குகள் இன்னும் உங்கள் செல்லவம் மென்மேலும் சிரக்கும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!