அமீரகம் துபாயில் நடைபெற்ற கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக் கூட்டம்.!


அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் 06/12/2013 வெள்ளிக்கிழமை அன்று இஷாஹ் தொழுகைக்கு பின் அப்பாஸ் ரூம் மாடி மேல்தளத்தின் வளாகத்தில் அமீரக துபை கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் S.முகைதீன் அப்துல் காதர் கஹ்ராத் ஓதி சிறப்புடன் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் நல்ல பல தீர்மானங்களும் பல செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. முஹல்லாவசிகளும் நமதூர் வாசிகளும் பயன்பெற அரசு அறிவித்துள்ள திருமண உதவித்தொகை பெற பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எளிய வழிமுறை ஆலோசனைகள் இன்னும் பல மஹல்லா முன்னேற்றத்திற்கான பயனுள்ள செய்திகள் கலந்துரையாடப்பட்டன. கீழத்தெரு மஹல்லா வாசிகளின் பல கோரிக்கைகளும் கேட்டு அறியப்பட்டன.

கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய தீர்மானங்கள் :
1,கீழத்தெரு அலியார் சார் அவர்கள் வீட்டில் நடைபெற்றுவரும் அரசு நியமித்த சிறு குழந்தைகளுக்கான பாலகர் பள்ளி சிறப்புடன் நடந்துவருகிறது. இப்பள்ளியில் கல்வியுடன் உணவும் வழங்கப்படுகிறது. ஆகவே இதுகுறித்து அறியாதோர்களுக்கு அறியப்படுத்தி மேலும் குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில முயற்ச்சிகள் மேற்கொள்வது.! .

2,மருத்துவர்கள் ஆலோசனையின்பெயரில் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசியை பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் போட்டுக்கொள்ள அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது.!

3,கீழத்தெரு மஹல்லாவில் இரண்டு மக்தப் பள்ளிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மூன்றாவது மக்தப் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது.மேலும் ஒரு மக்தப் பள்ளி விரைவில் காட்டுப்பள்ளித் தெருவிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. அருகில் வசிக்கக்கூடியவர்கள் தாங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி மார்க்கக் கல்விகற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப் படுகிறது.

4,இன்ஷா அல்லாஹ் நமது அடுத்த கூட்டம் செயற்குழு கூட்டமாக இருக்கும். அமீரக கீழத் தெரு மஹல்லாவின் புதிய தலைமை, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. ஆகவே அனைத்து நமது மஹல்லாவாசிகளும் தவறாது கலந்து கொள்ள அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப் படும்.

இன்னும் பல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு,
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்
புகைப் படங்கள் : S.அஜீஸ் & S.ஹபீப்
செய்தித் தொகுப்பு : அதிரை.மெய்சா









 
நன்றி அதிரை நியூஸ்

3 comments:

Anonymous said...

பதிவுக்கு நன்றி

Unknown said...

பதிவுக்கு நன்றி

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி மற்றும் கலந்துக்கொண்ட முஹல்லாஹ் வாசிகள் அனைவர்க்கும் நன்றிகள்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!